பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராணுவ முகாம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கண்டிப்பாக  தண்டிக்கப்படுவார்கள்: மோடி ஆவேசம்!

காஷ்மீரின் யூரியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக  இருந்தாலும் அவர்கள்  கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:17 pm

காஷ்மீரின் யூரியில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக  இருந்தாலும் அவர்கள்  கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் யூரி பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமின் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 17 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளும்  சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யூரி ராணுவ முகாம்மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நாம் கண்டிக்கிறோம். இந்த கொடும் தாக்குதலால் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்

தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வணக்கங்கள். தேசத்திற்கான அவர்களது சேவை என்றும் நினைவு கூரப்படும். அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபங்கள்

இவ்வாறு அவரது டிவிட்டர்  செய்தியில்  தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.